search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவ்ஜோத் சித்து"

    • உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள்.
    • இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக டோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது.

    உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7-வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.

    என்று சித்து கூறினார்.

    அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Sidhu #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

    இந்த விழாவின்போது நான் கண்ட மகிழ்ச்சியானது மதினா நகரை பார்க்க முடியாமல் எல்லைப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் காத்திருந்து, பின்னர் மதினாவை காணும் வாய்ப்பு கிடைத்த முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாகும். இந்த மகிழ்ச்சியை இந்தியாவில் உள்ள சீக்கிய மக்கள் இன்று அடைந்துள்ளனர்.


    நமக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் பிரச்சனைதான். இதை தீர்ப்பதற்கு இருநாட்டிலும் சரியான தகுதி படைத்த தலைவர்கள் இருந்தால் போதும். அப்படி பிரச்சனை தீர்ந்து நமது உறவுகள் பலப்படும்போது நமது சக்தியும், வீரியமும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக இந்தியாவில் சித்துவை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. அவர் அமைதியைப் பற்றிதான் பேசினார். அவர் இங்கு வந்து தேர்தலில் போட்டியிடலாம், அவர் வெற்றி பெறுவார். நமது இருநாடுகளுக்கு இடையில் நீடித்த நட்புறவு உருவாகும் வகையில் சித்து இந்தியாவின் பிரதமர் ஆகும் நாளுக்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Sidhu #ImranKhan
    தமிழ்நாட்டை பற்றி நவ்ஜோத் சித்து தெரிவித்த கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. #NavjotSingh #Rahulshouldapologise
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து கைகுலுக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானை நான் விரும்புவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிப்பதுபோல் நேற்று ஒரு கருத்தை சித்து வெளியிட்டிருந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசிய சித்து, ‘நான் தமிழ்நாட்டுக்கு சென்றால் அங்குள்ள மொழி புரியாது. ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகள் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது.


    அங்குள்ள உணவு பிடிக்காது என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும், தொடர்ந்து அதை நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது. அதேபோல் அவர்களின் கலாசாரமும் முற்றிலும் வேறுவிதமானது.

    ஆனால், நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று  குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சித்து கூறிய கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    உங்கள் கட்சி (காங்கிரஸ்) பாகிஸ்தானை நேசிப்பதும், உங்கள் கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பற்றி சித்து தெரிவித்த கருத்துக்காக அவர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.



    இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #GVLNarasimhaRao #NavjotSingh #Rahulshouldapologise
    ×